search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்கொரியா நீதிமன்றம்"

    தென்கொரியாவில் எந்த வித காரணமும் இன்றி இறைச்சிக்காக நாய்களை கொல்வது சட்டவிரோதம் என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. #SouthKoreancourt
    சியோல்:

    தென் கொரியாவில் நாய்களின் இறைச்சியை மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் இறைச்சிக்காக ஆண்டுதோறும் 10 லட்சம் நாய்கள் கொல்லப்படுகின்றன. ஆனால் நாய்கள் மனிதர்களின் உற்ற நண்பனாக, தோழனாக பழகுகின்றன. எனவே அவற்றை கொன்று உணவாக சாப்பிடக்கூடாது என்ற எண்ணம் தென் கொரியாவில் இளைய சமூகத்தினரிடம் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு விலங்குகள் நல அமைப்பான ‘கேர்’ புசியோன் நகரை சேர்ந்த நாய் பண்ணை உரிமையாளர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில் எந்த வித காரணமும் இன்றி நாய்களை கொல்ல தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டிருந்தது.

    அந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் இறைச்சிக்காக நாய்களை கொல்வது சட்டவிரோதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் புசியான் பண்ணை உரிமையாளர் குற்றவாளி என தீர்ப்பு அளித்த கோர்ட்டு அவருக்கு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் அபராதமும் விதித்தது.

    இதற்கு ‘கேர்’ அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும் தென்கொரியா முழுவதும் இறைச்சிக்காக நாய்கள் கொல்லப்படுவதை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. #SouthKoreancourt
    ×